RTI மூலம் வெளிவந்த உண்மைகள்.. போக்குவரத்து துறை விளக்கம்
"கடந்த 23ஆம் தேதி வரை, 3,071 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டு, 1,796 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது" - தமிழக போக்குவரத்து துறை விளக்கம்
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுவரை 892 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் விளக்கம்
2022-23ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூபாய் 420 கோடி ஒதுக்கீடு
833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது, மீதமுள்ள 167 பேருந்துகள் நவம்பர் 2024-க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்
2023-24 ஆம் நிதியாண்டில் ரூ. 446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 888 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது, 112 பேருந்துகள் நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும்