வேகவேகமாக சென்னையை நெருங்கும் சுழல்... ஆரம்பித்த அறிகுறி... ``இன்றே..'' - பறந்த அதிமுக்கிய உத்தரவு

Update: 2024-10-14 17:04 GMT

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும் - மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் - மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,

அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருக்க வேண்டும் -

முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய் - கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும் - மழை அளவு, அணைகளின் நீர்வரத்தை கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்கு நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் JCB இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் - தடையற்ற குடிநீர் வழங்க போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்