சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் 8 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர். 7வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையை, நாளைக்குள் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்ககளின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.