TNEB தலைவர் வெளியிட்ட அறிவிப்பு | Tamilnadu Electricity Board Chairman Announcement
மின்விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் புகைப்பங்களை TNEB செயலியில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர் பதிவிட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தியும், அதை சிலர் கடைபிடிப்பதில்லை என தெரிய வந்துள்ளது. அந்த சமயங்களில் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு கட்டாய ஓய்வு அல்லது பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.