தமிழ்நாடு மின் வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தலை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி தேவதாசை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், மே மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக ஷாஜகான் என்பவரையும், சம்பத் பொதுச்செயலாளராகவும், ராமச்சந்திரன் பொருளாளராகவும் தேர்ந்தெடுத்க்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் செயல்பாட்டில் தலையிட பழைய நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரியும், தங்கள் தேர்தலை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரியும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கூட்டமைப்பின் சட்ட திட்டங்களில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், இருதரப்பினரும் அந்த குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக குறிபிட்டார். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கும், கூட்டமைப்பை நிர்வகிக்கவும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாசை நிர்வாகியாக நியமித்து உத்தரவிட்டார்.