நாட்டையே பரபரப்பாக்கிய சென்னை ரயில் விபத்து - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-10-14 02:58 GMT
  • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, வெள்ளிக்கிழமை இரவு, நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பீகார் நோக்கிச்சென்ற விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குப் பிறகு, சீரமைப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்து, கவரப்பேட்டை ரயில் நிலையத்தில், இரு மார்கத்திலும் விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும், விரைவு ரயில் என்ஜினை மட்டும் சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மெயின் லைனில் இருந்து மீட்க முடியாத சூழல் நிலவியது. ரயில்வே ஊழியர்களின நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், தடம் புரண்ட விரைவு ரயில் என்ஜின் அகற்றப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்