நிறுத்தும்போது குலுங்கிய பஸ்.. சிந்திப்பதற்குள் நடந்த விபரீதம்.. பகீர் காட்சி

Update: 2024-07-11 11:56 GMT

திருப்பத்தூரில் அரசுப்பேருந்தின் பின்பக்கத்தில், பிக்கப் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அரசுப்பேருந்து ஒன்று நின்றது. அப்போது, வேகமாக வந்த பிக்கப் வாகனம் ஒன்று, அரசுப்பேருந்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில், பிக்கப் வாகனத்தில் பயணம் செய்த 75 வயது முதியவருக்கு, கை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. அரசுப்பேருந்தில் பயணித்த யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்