திருப்பதி மலையில் ஆவணி மாத பெளர்ணமியை ஒட்டி கருட வாகன புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது. உற்சவரான மலையப்ப சாமி, ஆபரண அலங்காரத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டார். பிறகு நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.