திருப்பதி லட்டால் வெடித்த புது பூகம்பம்.. நாடே கொதிக்க தமிழகம் பக்கம் திரும்பும் கண்

Update: 2024-09-21 06:42 GMT

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும், பக்தி பரவசத்துடன் வாங்கி செல்லும் லட்டில், முந்தைய ஆட்சிக்காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக தற்போதைய பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்ப, தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவில், திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது இவ்விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்தது..

ஆந்திராவை கடந்து, நாடு முழுக்க பேசு பொருளானது திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரம்..

இந்நிலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் நெய்வேத்திய பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு ஆகியவற்றின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளதை பலமுறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றும் கண்டுகொள்ளவில்லை என ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ரமண தீட்சதலு, திருமலையின் முன்னாள் தலைமை அர்ச்சகர்

இதே போல் அரசியல் தலைவர்கள் பலர் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சூழலில், தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷ்ண வாரியம் அமைப்பதற்கான நேரம் இது என பேசியுள்ளார் ஜனசேனா கட்சித்தலைவர் பவன்கல்யாண்..

ஆந்திராவில் பரபரப்பு கிளப்பியுள்ள இவ்விவகாரம் மெல்ல மெல்ல தமிழகம் பக்கமும் திரும்பியது. காரணம், திருப்பதி லட்டுக்கு நெய் சப்ளை செய்தது, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி என்ற நிறுவனம் தான் என தகவல் பரவியது..

பொதுவாகவே திருப்பதி கோவிலுக்கு தேவையான நெய், ஆன்லைன் டெண்டர் மூலம் தான் கொள்முதல் செய்வதாக கூறப்படும் நிலையில், அதில் கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் ஏ.ஆர். டெய்ரி நிறுவனமும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் இந்நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் இருந்ததாக தகவல் பரவிய நிலையில், அந்நிறுவனத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது..

ரெனி, தரக்கட்டுப்பாடு ஊழியர், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம்

ஏஆர் டெய்ரியில் இருந்து திருப்பதிக்கு தற்போது நெய் போவதில்லை என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு நேர்மறையான முடிவுகளே வந்ததாகவும் கூறுகின்றனர்..

கண்ணன், தரக்கட்டுப்பாடு ஊழியர், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம்

இப்படி மாநிலம் கடந்து திருப்பதி லட்டு விவகாரம் பேசு பொருளாகியுள்ள சூழலில், ஏழுமலையான் பக்தர்களோ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்