திருப்பத்தூரில் உணவு பரிமாறும் நபரை தாக்கிய திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டையில் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்.பி., கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து நடைபெற்ற மதிய விருந்தின்போது, உணவு பரிமாறும் நபரை திமுகவினர் சிலர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.