பிளாஸ்டிக் கவரில் சிறுநீர்.. அங்கங்கே காயம்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி

Update: 2024-08-28 07:56 GMT

திருப்பத்தூரில், பிளாஸ்டிக் கவரில் சிறுநீர் கழித்து அதனை கட்டி கழிவுநீர் கால்வாயி​ல் வீசியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்தார். பயாஸ் என்பவர் பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழித்து அதனை கட்டி பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான அரிசி கடையை ஒட்டி செல்லும் கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார். இதுகுறித்து பிரசாந்த் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பிரசாந்தை பயாஸ் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பயாஸிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்