நடுரோட்டில் அட்டகாசம் செய்த இளைஞர்கள் - தேடி பிடித்து போலீஸ் செய்த தரமான சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம் செய்த இளைஞர்களை தேடி பிடித்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். விசாரணையில் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவுக்காக பைக் சாகசம் செய்து வீடியோ எடுத்துதாக இளைஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து, வாணியம்பாடியைச் சேர்ந்த சதாம் உசேன், இஸ்மாயில், சாதிக் பாஷா, முகமது அக்கிப் உள்பட 6 பேருக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.