ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் கோரிக்கை.. நான் பாத்துக்குறேன்னு சொல்லி உடனே போட்ட உத்தரவு

Update: 2024-09-03 15:32 GMT

திருப்பத்தூரில் புதுப்பேட்டை சாலை ரயில்வே தரைப்பாலத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்‌. அந்த தரைப் பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக, பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, அந்த தரைப் பாலத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் ரயில்வே துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மழைநீர் செல்லும் கால்வாய்களை தூர் வாரி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்