மலேஷியா செல்ல முயன்ற வங்க தேச வாலிபர் கைது - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மலேசியா செல்லவிருந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த போது, அவர் சட்ட விரோதமாக 2012இல் இந்தியா வந்த வங்க தேசத்தவர் என தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, வாக்காளார் அட்டை பெற்று, அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. மூஜிப் ஹுசைன் என்ற அந்த வங்க தேசத்தவரை கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.