திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஏழுமலையானை வழிபடுவதற்காக புது மனைவியுடன் நடந்து சென்ற தமிழகத்தைச் சேர்ந்த புது மாப்பிள்ளை நரேஷ், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள கேசரம் கிராமத்தை சேர்ந்த நரேஷ், கடந்த 11ம் தேதி சுவாதி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் புதுமாப்பிள்ளை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.