கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், திருநள்ளாறு கோயிலில் சாமி தரிசனம் செய்தார். யுகாதி தினத்தை யொட்டி சனீஸ்வர பகவானையும் அவர் வழிபட்டார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து மாலை அணிவித்து மந்திரங்கள் ஓத பூஜை செய்தனர். சிறப்பு வழிபாடு செய்து, மனதுருகி வழிபாட்டில் ஈடுபட்ட டி.கே.சிவக்குமார், கோயில் யானைக்கு பழங்கள் கொடுத்து யானையிடம் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,கர்நாடகா மாநிலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதிக மழை பெய்ய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.