பஸ்சை ஓவர்டேக் செய்த டயர் - நம்பிக்கை நாயகனான டிரைவர் - மதுரையில் பகீர் சம்பவம்"
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உசிலம்பட்டியிலிருந்து பேரையூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. நல்லுத்தேவன்பட்டி கண்மாய் அருகில், பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடியது. பேருந்து ஓட்டுநர் மகேஷ் துரிதமாக செயல்பட்டு, பேருந்தை கண்மாய்க்குள் சென்று விடாமல், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பணிமனை ஊழியர்கள், சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தில் கிடந்த டயரை மீட்டு பேருந்தை சரிசெய்து எடுத்துச் சென்றனர்.