பெண்ணை அடக்கம் செய்யும் நேரம்..வீட்டை சூறையாடிய உறவினர்கள் - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-08-15 08:02 GMT

திட்டக்குடி அருகே பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெண்ணின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தது வீட்டை சூரையாடினர்.திட்டக்குடியை அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மனைவி கௌசல்யா. இவர் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கடந்த 2 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனிற்றி கௌசல்யா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உடல் இறுதிச் சடங்குக்காக வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து வீட்டையும் கௌசல்யா உறவினர்கள் சூறையாடினர். தகலறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, உடன்பாடு எட்டப்பட்டு, கௌசல்யாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்