விளையாட்டு போட்டியில் சோகம் ..மாணவியின் முகத்தில் பற்றிய தீ -பரபரப்பான கல்லூரி வளாகம்
தீ சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவர், திடீரென விபத்துக்குள்ளாகி அவரின் முகத்தில் தீப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சிலம்பம் சுற்றுவது, சுருள்வாள் வீசுவது என பல்வேறு போட்டிகளில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சாகசம் புரிந்தனர். இதில், சிலம்பக் கம்புகளில் தீப்பற்ற வைத்து சாகசம் செய்த மாணவி ஒருவர், திடீரென விபத்துக்குள்ளாகி, அவரின் முகத்தில் தீப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.