தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம் அருகே குமாஸ்தா குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். மது பழக்கமுடைய அவர் மத்திய பாகம் காவல் நிலையம் அருகே நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. நேற்று இரவு அவர் கத்தியால் குத்தப்பட்டு அங்கு இறந்து கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் பால்ராஜ் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.