திருவாரூரில் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை | Thiruvarur
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள, முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் 'ஹக்கீம் ஷெய்கு தாவுது காமில் ஒலியுல்லா' தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவின், 723வது ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித கொடி பல்லக்கு ஊர்வலம் தர்காவிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை ஆசாத் நகர்,புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம்வந்து மீண்டும் தர்ஹாவை வந்தடைந்தது. வரும் 12 ம் தேதி தேதி நள்ளிரவில் சந்தனக்கூடு விழா நடைபெறும் நிலையில், 13ம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழாவில் பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர.