பாஜக உட்கட்சி விவகாரம்..! மனைவி வெளியிட்ட பதிவு.. கணவனை சரமாரியாக தாக்கிய பாஜக மாவட்ட தலைவர்
திருவாரூரில் பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது...
குடவாசல் காவனூர் பகுதியைச் சேர்ந்த மது சூதனன் பாஜகவில் விவசாய பிரிவு மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். இவர் ஓகை என்ற இடத்தில் அடகு கடை நடத்தி வந்த நிலையில் பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தனது கணவர் திருவாரூர் மாவட்ட பாஜகவில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்து பதிவிட்டு வந்ததாகவும், குறிப்பாக மாவட்ட தலைவர் பாஸ்கருக்கு எதிரான கருத்துகளையும் அவர் பதிவு செய்துள்ளதாகவும்... எனவே பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே கூலிப் படையினர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாஸ்கர், செந்திலரசன் அடையாளம் தெரியாத 4 நபர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக பொறுப்பாளர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.