நைசாக பேசி வீடு வீடாக கையெழுத்து கேட்ட பெண்... கையெழுத்து போட்டதும் தலைகீழாக மாறிய வாழ்க்கை

Update: 2024-09-21 06:28 GMT

நைசாக பேசி வீடு வீடாக கையெழுத்து கேட்ட பெண்... கையெழுத்து போட்டதும் தலைகீழாக மாறிய வாழ்க்கை - கண்ணீருடன் கதறும் மக்கள்

வந்தவாசி அருகே தங்களது பெயரில் 40 லட்சம் ரூபாய்க் மேல் பணம் பெற்று தப்பியோடிய தம்பதி குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் புகார் அளித்துள்ளனர்.

வந்தவாசியை அடுத்த காவேடு கிராமத்தை சேர்ந்தவர் சரசு. இவர் சுற்றுவட்டார கிராமங்களில் வீடு வீடாக சென்று லோன் வாங்கித் தருவதாக பேசி கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. அவற்றை வைத்துக்கொண்டு தனியார் நிதி நிறுவனங்களில் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கிக்கொண்டு, பின்னர் கணவருடன் தலைமறைவாகியுள்ளார். ஆனால், நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தங்களது வீடு தேடி வந்து தகாத வார்த்தையால் பேசுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி தலைமறைவாக சென்ற சரசு மற்றும் அவரது கணவர் சேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்