சுட்டெரிக்கும் வெயில் - செத்து மடிந்த கோழிகள்

Update: 2024-05-02 03:27 GMT

ஆரணி அருகே வெப்பம் தாங்க முடியாமல் கோழிப் பண்ணையில் 70,000 ரூபாய் மதிப்பிலான 350 கோழிகள் இறந்தன. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ், அதே கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூருக்கு அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் கோழிகள் இறக்க நேரிடுவதாகவும், தமிழகஅரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்