3 நாள் பிறகு தெரிந்த உண்மை... கண்ணீர் விட்டு கதறும் விவசாயி

Update: 2024-10-18 08:53 GMT

திருவண்ணாமலை ஏம்பலம் கிராமத்தில் நெற்பயிருக்கு களை கொல்லி மருந்து அடித்ததில், மூன்று ஏக்கர் நெற்பயிர்கள் பட்டுப்போனதாக விவசாயி கண்ணீர் வடிக்கிறார்.

வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தை சேர்ந்த கண்ணபிரான், மூன்று ஏக்கர் நெற்பயிர் பயிரிட்டுள்ளார். நெற்பயிருக்கு களைக்கொல்லி அடிப்பதற்கு தேசூர் பகுதியில் உள்ள பசுமை அக்ரோ சர்வீஸ் எனும் கடையில் களைக்கொல்லி மருந்து வாங்கி வந்து அடித்துள்ளார். களைக்கொல்லி அடித்த பிறகு மூன்று ஏக்கர் நெற்பயிர்கள் கருகியிருக்கிறது. காய்ந்து கருகிய பயிர்களை பார்த்து கண்ணீர் வடித்த விவசாயி கண்ணபிரான், வேளாண்மை துறை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மருந்து கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். பயிர்கள் நாசமானதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற மருந்துகளால் விவசாய பூமியும் நாசம் ஆவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்