எருது விடும் திருவிழா சீறிப்பாய்ந்த காளை கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு

Update: 2024-01-27 15:43 GMT

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழா!சீறிப்பாய்ந்து ஓடிய காளை கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு! உரிய பாதுகாப்பு வசதி இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின.

அதனை தொடர்ந்து எருது விடும் திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீராகள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்