திருநள்ளாறில் திரளும் பக்தர்கள்.. 6 வகையான சாப்பாட்டுடன் தொடங்கிய சண்டே | Thirunallar Temple
திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய, அதிகாலை முதல் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வெள்ளி கவசத்தில் அருள் பாலித்தார் சனீஸ்வர பகவான். பக்தர்களுக்கு சர்க்கரை
பொங்கல், சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், உள்ளிட்ட ஆறு வகையான விருந்து அன்னதான கூடத்தில் வழங்கப்பட்டது. கல்யாண வீட்டுக்கு வந்து விருந்தாளிகள் போல் உபசரித்த கோயில் நிர்வாகத்தைக் கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.