திண்டிவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக பகலில்
கடும் வெயிலும் இரவில் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் திண்டிவனம் நகரம் முழுவ தும் நகராட்சியின்
சார்பில் தோண்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட
பள்ளங்கள் முறையாக மூடப்படாமல், குண்டும் குழியுமாக
காணப்படுவதால் பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள்
ஆளாகி வருகிறார்கள். பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில்
மழை நீர் சூழ்ந்துள்ளதால் சாதாரண சாலை எது, பள்ளம்
தோண்ப்பட்டசாலை எது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள்
விழுந்து அவதிப்படுகின்றனர். திண்டிவனம் காமராஜர் நகர்,
விவேகானந்த நகர், அண்ணா நகர் உட்பட பல பகுதிகளில்
மழை நீர் சூழ்ந்துள்ளது.