"மண்டை மேல இருந்த கொண்டையை..." - அலுங்காமல் வந்து ஆட்டையை போட்ட திருடன் - வசமாக CCTV-யில் சிக்கிய பரிதாபம்
புதுச்சேரியில், கடைகளின் பூட்டை உடைத்து சுமார் 10 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையான மூலகுளம் சந்திப்பில் உள்ள கேஸ் ஏஜென்சி மற்றும் ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாத்திர கடை கடைகளில், ஷட்டரின் பூட்டுகளை உடைத்து புகுந்த நபர், 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.