பெண்ணின் ஆடியோவை காட்டி டாக்டரிடம் மிரட்டல் - SP-யின் ஆக்க்ஷனில் வெளிவந்த 6 பேரின் நிஜ முகம்

Update: 2024-09-25 09:33 GMT

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நிருபர்கள் என்ற பெயரில் போலியான ஆடியோவை உருவாக்கி அரசு மருத்துவரை மிரட்டி 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் அனுமந்தன் என்பவர், தனியாக நடத்தி வரும் கிளினிக்கில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு கும்பல் மிரட்டியுள்ளது.இதற்கான ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அந்த கும்பல், அந்த செய்தியை பத்திரிகையில் வெளியிடாமல் இருக்க 25 லட்ச ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சிலின் கம்பம் வேலிகிளை சார்பில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் புகார் தரப்பட்டது. இதையடுத்து அந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தபோது, ஒரு பெண்ணை பேச வைத்து போலியாக ஆடியோ தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, சின்னத்தம்பி, ஆனந்தன், கார்த்திக், அழகர்சாமி, ராஜாமுத்து, அழகர் ஆகிய 6 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பேரும் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. அவர்கள், அரசு அலுவலகங்கள்,கல் குவாரிகள், அரசியல் பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்