பெண் ஊழியரின் இருசக்கர வாகனம் திருட்டு - டோக்கன் வழங்க சென்றபோது கைவரிசை

Update: 2024-01-13 03:36 GMT

சென்னை ஆதம்பாக்கத்தில், பொங்கல் டோக்கன் வழங்கச் சென்ற ரேஷன் கடை பெண் ஊழியரின் இருசக்கர வாகனத்தை, மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ரேஷன் கடை ஊழியர் லலிதா என்பவர், அப்பகுதியில் உள்ள விநாயக கோயிலில் வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் டோக்கன் விநியோகம் செய்ய சென்றபோது, கூட்டத்தை பயன்படுத்தி வெளியில் நிறுத்தியிருந்த லலிதாவின் இருசக்கர வாகனத்தை மர்மநபர் திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்