சுவர் இடிந்து விழுந்து இரண்டாக உடைந்த காலுக்கு ஊழியர்கள் போட்ட பேப்பர் கட்டு..அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-11-03 10:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வீடுகட்டும் பணி நடந்து வந்தபோது, அருகில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் காளிமுத்து, அலெக்ஸ் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் அருளானந்தம் என்பவரின் வலது கால் இரண்டாக உடைந்தது. பரமக்குடி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அருளானந்தத்தின் காலில் அட்டைபெட்டி காகிதத்தை வைத்து ஊழியர்கள் கட்டுப்போட்டுள்ளனர். மருத்துவர்கள் பணியில் இல்லாததால் வலியில் துடித்த அருளானந்தத்திற்கு அவசர அவசரமாக அட்டைப்பெட்டி காதித்தை வைத்து மருத்துவமனை ஊழியர்கள் கட்டுப்போட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்