பூண்டை ஓவர்டேக் செய்ய போகும் தக்காளியின் விலை.. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

Update: 2023-07-27 08:08 GMT

கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 30 ரூபாய் அதிகரித்து இன்று 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனை நிலையங்களில் 150 முதல்160 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தினமும் ஆயிரத்து 100 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் 400 டன் தக்காளியே வந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பீன்சும் கிலோவுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், உருளை, காலிஃப்ளவர் 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட், பாகற்காய் 50 ரூபாய்க்கும்,

பெங்களூர் கேரட் 20 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட், வெண்டை, மாங்காய் 40 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கத்திரி, முருங்கை, எலுமிச்சை 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், பட்டாணி 200 ரூபாய்க்கும், பூண்டு 220 ரூபாய்க்கும், அவரை 45 ரூபாய்க்கும், கருவேப்பிலை 25 ரூபாய்க்கும், தேங்காய் 27 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்