புயல் முடிந்தும் மடியாத வெள்ளம்.. வேதனையின் உச்சியில் பெரம்பூர் மக்கள்-"குழந்தைக்கு பால் கிடைக்கல.."
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீர் இன்னும் வடியாததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது... வியாசர்பாடி , புளியந்தோப்பு, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புரசைவாக்கம் வருவதற்கு பிரதான சாலையாக உள்ளது இந்த பெரம்பூர் பேரக்ஸ் சாலை. மழை வெள்ளத்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழை விட்டு 2 நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது... மழை நீரில் கழிவு நீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசும் நிலையில், இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.