கோவிலுக்கு கொடுத்த நிலம்..ஆக்கிரமிப்பு செய்த சங்கம்..கோர்ட் போட்ட உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலையில் உள்ள 41,952 சதுர அடி நிலம், தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்க கட்டிடம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பலமுறை அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தமிழக அரசு மீட்டு அங்கிருந்த அங்கிருந்த வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்தது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே நிலம் கோவிலுக்கு சொந்தமானது என கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டினர். மேலும் உரிய சட்டப்படி நிலத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட்டனர்.