புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 2 தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனிடையே இந்த திடீர் மழையால், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்..