கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வீட்டின் முன்பு அமர்ந்தபோது பாம்பு கடித்து 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவில் சபையார்குளம் பகுதியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை வீரரான அருள்தாஸ் என்பவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டின் முன்பு அமர்ந்திருந்த இவரது 16 வயது மகள் முத்து பைரவியை பாம்பு கடித்தது. இதனால் காயமடைந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சபையார்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.