மகளை 'one side love' செய்தவரை கண்டித்த தந்தை.. Youtube பார்த்து இளைஞர் செய்த கொடூர காரியம்

Update: 2023-08-27 05:27 GMT

மகளை 'one side love' செய்தவரை கண்டித்த தந்தை..

"திடீரென இரவில் பயங்கரமாக அதிர்ந்த வீடு.."

Youtube பார்த்து இளைஞர் செய்த கொடூரம்

அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி


ஒரு தலை காதலை கண்டித்ததால், Youtube பார்த்து தயாரித்த வெடிகுண்டை, பெண் வீட்டின் மீது வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள், கைது செய்யப்பட்டனர்.

கடலூர் - புதுச்சேரி எல்லையில் உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்த முருகானந்தத்திற்கு

2 மகள்கள் உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அன்று நள்ளிரவில் வீடு அதிர்ந்த நிலையில்

பயங்கர சத்தத்தோடு, வெடிகுண்டு வெடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து

முருகானந்தம், தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி பதிவுகளை கொண்டு,

3 இளைஞர்கள் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அவர்கள், புதுவை மாநிலம் பனையடிகுப்பத்தை சேர்ந்த சுனில்,

அவரது நண்பர்கள் புதுக்கடை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதில் சுனில் என்பவர் முருகானந்தத்தின் 2-வது மகளை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை முருகானந்தம் கண்டித்துள்ளார். இதனால் அவர்களை பழி வாங்க,

Youtube பார்த்து வெடிகுண்டு தயாரித்து வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்