சொந்த வீட்டில் House Owner உடலை வைக்கவே எதிர்ப்பு... வாடகைக்கு இருப்பவர் செய்த அட்டூழியம்
சேலத்தில், இறந்த பெண்ணின் உடலை, சொந்த வீட்டில் வைக்க, வாடகைக்கு குடியிருப்பவர் அனுமதி மறுத்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சூரமங்கலத்தைச் சேர்ந்த கங்காதேவி, தமது வீட்டை கலைவாணி என்ற பெண்ணுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, காசகனூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், கலைவாணி வீட்டை காலி செய்ய மறுத்ததால், கங்காதேவி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கங்காதேவி திடீரென உயிரிழந்தார். அவரது உடலை சூரமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் வைப்பதற்காக உறவினர்கள் கொண்டு வந்தனர். ஆனால், வாடகைக்கு குடியிருக்கும் கலைவாணி அதற்கு அனுமதி மறுத்ததால், கங்காதேவியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போலீசார், அவர்களை கைது செய்தனர்.