உதகையில் தொடர் மழையால் அணைக்கட்டுகள் முழு கொள்ளளவு எட்டியிருப்பதால், 12 நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. உதகை அருகே குந்தா, கத்தை, அவலாஞ்சி, அப்பர் பவானி, காட்டு குப்பை ஆகிய இடங்களில் நீர்மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதேபோன்று, பைகரா நீர்மின் திட்டத்தில் ஆறு மின் நிலையங்கள் உள்ளன. இந்த நீர் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.