"15 சிறுவனுக்கு ஹெச்.ஐ.வி.யா?" - ரீ டெஸ்டில் வெளியான உண்மை.. சென்னையில் அதிர்ச்சி
மதுரவாயலைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உயர் படிப்பிற்காக வெளிநாடு செல்ல விசா விண்ணப்பித்திருந்தார். அது தொடர்பாக சிறுவனுக்கு மருத்துவ சான்று பெறுவதற்கு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனுக்கு ஹெச்.ஐ.வி. இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் தங்கள் சொந்த ஊரான செங்கல்பட்டில் உள்ள பரிசோதனை மையத்தில் மீண்டும் பரிசோதனை செய்தனர். இதில் சிறுவனுக்கு ஹெச்.ஐ.வி இல்லையென அறிக்கை அளிக்கப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனை மையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது மென்பொருள் கோளாறு காரணமாக தவறான அறிக்கை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பரிசோதனை மையம் மீது புகாரளிக்கப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் கராத்தே கார்த்தி தெரிவித்துள்ளார்.