உத்தரப்பிரதேசத்தில் தலைமறைவாக உள்ள சாமியார் போலே பாபாவை, போலீசார் தேடி வருகின்றனர். ஹாத்ரசில் நடைபெற்ற போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சாமியார் போலே பாபா தொடர்ந்து, தலைமறைவாக உள்ள நிலையில், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள டிரஸ்ட் அலுவலகம் ஒன்றில், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.