சொத்தின் மீது திடீர் மோகம் - மகனுடன் தாய் செய்த அற்ப செயல் - பகீர் CCTV
வாணியம்பாடி அடுத்த புருசோத்தம குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். வழக்கறிஞரான இவர், அதே பகுதியில் வசித்து வரும் தனது தாய் வனிதா பெயரில் இடம் வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் சம்பத்தின் சகோதரரும் பங்கு கேட்டு தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசில் ஏற்கனவே புகாரளிக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பவத்தன்று தன் இளையமகன் நேருவுடன் சேர்ந்து, சம்பத்தின் வீட்டை அவரின் தாய் சுத்தியலால் அடித்து உடைக்கும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து சம்பத் போலீசில் புகாரளித்திருக்கும் நிலையில், சிசிடிவி ஆதாரத்துடன் போலீசர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.