ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிக்கிய `எலி' - சம்போ செந்திலின் மீட்டிங் ஸ்பாட்? ஈசா யார்?

Update: 2024-08-08 08:46 GMT

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிக்கிய `எலி' - சம்போ செந்திலின் மீட்டிங் ஸ்பாட்? ஈசா யார்?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில்

21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த வழக்கில் சுமார் 200 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பலுக்கு பக்கபலமாக இருந்த சம்போ செந்திலின் கூட்டாளி ஈசா சேலம் சிறையில் உள்ள நிலையில், கட்டட ஒப்பந்தக்காரர் கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்த வழக்கில் புது வண்ணாரப்பேட்டை போலீசார் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரித்துள்ளனர்.

சம்போ செந்தில் நெட்வொர்க், ஈசா அவரை சந்திக்கும் இடம், சென்னையில் அவருக்கு யார் யாரெல்லாம் மாமூல் வசூலித்து கொடுப்பவர்கள்?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் எந்தெந்த ஊரை சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு தொடர்பு உள்ளன? என விசாரணை நடத்தியுள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் இருக்கும் சம்போ செந்திலின் மற்றொரு கூட்டாளி எனக் கூறப்படும் எலி யுவராஜையும், கட்டட காண்ட்ராக்டர் கார்த்திகை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, எலி யுவராஜுக்கு தெரிந்த தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணையை தீவிர படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்