அம்மோனியாவால் பறிபோன அப்பாவியின் உயிர் ... போராட்டத் தில்குதித்த உறவினர்கள்

Update: 2024-08-31 05:48 GMT

அம்மோனியாவால் பறிபோன அப்பாவியின் உயிர் ... போராட்டத் தில்குதித்த உறவினர்கள்

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் உரத்தொழிற்சாலைக்கு சொந்தமாக டாக் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சோடா ஆஸ் மற்றும் அம்மோனியம் குளோரைடு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளியன்று பிற்பகல் இத்தொழிற்சாலையில் நடந்த பராமரிப்பு பணியின் போது, அம்மோனியா பைப்லைனில் ஏற்பட்ட கசிவு காரணமாக மஞ்சள் நீர் காயல் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் உயிரிழந்தார். மேலும், தன்ராஜ், மாரிமுத்து விஷ்ணு மற்றும் ஹரி பாஸ்கர் ஆகிய நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆலையில் உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களை வெளியேற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்