`TVK கொண்டாட்டம்' மும்மத கோயில்களில் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு

Update: 2024-09-08 14:04 GMT

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடலூருக்கு வந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 3 மத கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தார். வண்டிப்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவில், மஞ்சக்குப்பத்தில் உள்ள மசூதி மற்றும் தேவாலயத்திற்கு நேரில் சென்று வழிபட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். மேலும், கட்சி நிர்வாகிகளின் வாகனங்களில் கட்சிக் கொடியினை அவர் பொருத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்