தோட்டத்தில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம் - நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2023-12-16 09:31 GMT

திருப்பூர் அருகே விவசாய நிலத்தில் 20 அடி கம்பியை தூக்கிச் சென்ற ஐயப்ப பக்தர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவர் திருப்பூர் மாநகராட்சி நல்லூர் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி நாகமணி என்பவரிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார் . இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து கோவில் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த 9 ம் தேதி தான் நாகமணி க்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த 20 அடி உயர இரும்பு கம்பியை வேறு இடத்தில் வைப்பதற்காக நெட்டுக்குத்தாக வைத்தபடி தூக்கிச் சென்றுள்ளார் அப்போது தோட்டத்தின் இடையே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பி மீது சுரேஷ்குமார் தூக்கிச் சென்ற கம்பி பட்டு நொடி பொழுதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவர் கால் தடுக்க விழுந்ததாக நினைத்து அருகில் பணியாற்றிய நபர்கள் சென்று பார்த்த பொழுது மூச்சுப் பேச்சென்று சுரேஷ்குமார் இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தனர் இதனை அடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதனை அடுத்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான‌ சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்