"சாரி பிரதர்-சிஸ்டர்"அழகாக மன்னிப்பு கேட்டு... பேங்க் மேனேஜர்க்கு அதிர்ச்சி கொடுத்த திருடன்
திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் புறவழிச் சாலை அருகே சுவரில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு வங்கி மேனேஜர் வீட்டில் திருடர்கள் பைக்கைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வம் நகரை சேர்ந்த தனியார் வங்கி மேனேஜர் இளங்கோ வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் உள்ளே எதுவும் கிடைக்காததால் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றனர். அத்துடன் சுவரில் சாரி பிரதர்-சிஸ்டர், மன்னித்து விடுங்கள்" என்று அழகான கையெழுத்தில் மன்னிப்பு வேறு கேட்டிருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.