குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்வு நடைபெறும்தேதிகள் குறித்த திருத்தப்பட்ட ஆண்டு தேர்வுகால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளன. குரூப் 1 தேர்வு ஜூலை 13ம் தேதியும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ம் தேதியும் நடைபெற உள்ளன. எனினும் இந்தத் தேர்வு அறிவிப்பு குறித்த அட்டவணை உத்தேசமானது என்றும், சூழலுக்கு ஏற்ப தேதிகளில் மாற்றமிருக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ எ ன்ற இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.