BDO உள்பட 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் - கலெக்டர் அதிரடி

Update: 2024-08-04 12:58 GMT

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மன்ற ஒப்புதல் பெறாமல் ரூபாய் 3.5 கோடி ஒதுக்கீடு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் அதிகாரிகள் இணைந்து ஒன்றிய குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளுக்கான டெண்டருக்கு அனுமதி அளித்ததாக ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் அளித்திருந்தனர். இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அனுமதி அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிதேவி, அலுவலக கணக்காளர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் கனகலட்சுமி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்